டிஎன்பிஎஸ்சி

இனி டிஎன்பிஎஸ்சி மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி – யார் விண்ணப்பிக்கலாம்

Please Share This

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள உதவி மக்கள் தொடர்பு (அலுவலர்) நேரடி நியமனம் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணித் தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்ட இந்த அலுவலர் பதவி, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டது. தற்போது தற்காலிக விதிகளின் படி, நேரடி நியமனம், பணிமாறுதல் மூலம் நியமனம், பதவி உயர்வின் மூலம் நியமனம் ஆகிய மூன்று வழிகளில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது வரை ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனங்கள் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துளளது. மேலும், பத்திரிக்கை, சினிமா, விளம்பரம், மக்கள் தொடர்பு ஆகிய படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று நிர்ணயித்துள்ளது.

See also  ORACLE JOB CUTS: இந்தியா, கனடா, ஐரோப்பாவில் ஊழியர்களை குறைக்க திட்டமிடும் Oracle Corp

இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிடப்பட்ட அரசாணையில்,அரசின் திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளச் செய்தல், படக்காட்சிகள் நடத்தப்படும் இடங்களில் அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்த விவரங்களை பொது மக்கள் தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் விளக்கமாக எடுத்துக் கூறுதல், அரசு வெளியிடும் செய்திகளை உடனுக்குடன் மக்கள் அறியும் வண்ணம் சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தல், ஆகிய முக்கியப் பணிகள் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விளம்பரம் பணியிடங்களை நிரப்புவதற்கு, அவ்வப்போது தற்காலிக விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அத்தற்காலிக விதிகளின்படி நியமனங்கள் கீழ்க்காணும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

  • நேரடி நியமனம் (Direct Recruitment)
  • பணிமாறுதல் மூலம் நியமணம் (Recruitment by Transfer)
  • பதவி உயர்வின் மூலம் நியமனம் (by Promotion)

தற்போதைய காலத்தேவை, சமூக ஊடகத்தின் வீச்சு, நவீன தொழில்நுட்பக்களுக்கேற்ப மக்கள் தொடர்பு மற்றும் களவிளம்பரங்கள் செய்யப்பட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றின் அடிப்படையில் நேரடி நியமனத்திற்கான அடிப்படைத் தகுதிகளை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் கல்வித் தகுதியினை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

See also  BECIL vacancy 2022: மத்திய அரசு வேலை...10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நேரடி நியமன முறையில் நியமனம் செய்யப்படும் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியமளர் தேர்வாணையத்தின் அகப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்யலம் என கருதி அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.

மேலும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்)காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு/பணிமாறுதல் இடையே 1:1 என்ற விகிதாச்சாரத்தில் நிரப்பப்பட வேண்டும். (50% நேரடி நியமனம் 50% பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல்)இவ்வாறு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.


Please Share This

Leave a Reply

Your email address will not be published.