ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி

Please Share This

புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் கீழ் 8 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (Block Coordinator) பணியிடங்களுக்கு பின்வரும் விபரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 2 காலிப்பணியிடமும்,
  • அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும்,
  • ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும்,
  • குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும்,
  • மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 2 காலிப்பணியிடமும்,
  • பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் 2 காலிப்பணியிடமும்,
  • திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில்1 காலிப்பணியிடமும்,
  • புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1 காலிப்பணியிடமும் என ஆகமொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தகுதி வரம்பு (Block Coordinator Eligibility Criteria), ஏதேனும் ஒரு பாட பிரிவில் பட்டதாரியாக இருக்க வேண்டும். அத்துடன் MS Office படிப்பில் குறைந்த பட்சம் ஆறுமாத கால சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்.

See also  TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பொதுத் தமிழ் விடைக்குறிப்பு வெளியீடு; கட் ஆப் மார்க் எவ்வளவு?

விண்ணப்பம் அனுப்ப வேண்டி கடைசி நாள் 16.08.2022 ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, இணை இயக்குநர் /திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, DSMS வளாகம், புதுக்கோட்டை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள மேற்குறிப்பட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரில் அலுவலக பணி நேரத்தில் அல்லது தபால் மூலமாக அனுப்பி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


Please Share This

Leave a Reply

Your email address will not be published.