தமிழக மீன்வள துறையில்

தமிழக மீன்வள துறையில் 433 காலிப்பணியிடம் அறிவிப்பு

Please Share This

தமிழக மீன்வள துறையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (TN Fisheries Department), தமிழ்நாடு முழுவதும் உள்ள சாகர் மித்ரா காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் காலியாக உள்ள சுமார் 433 சாகர் மித்ரா காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறை ஜூலை 30 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (TN Govt job Recruitment) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். TN மீன்வளத் துறை ஆட்சேர்ப்புக்கான காலியிட விவரங்கள், வயது வரம்பு, சம்பளம், ஆன்லைன் விண்ணப்பப் படிவம், விண்ணப்பிப்பதற்கான நேரடி இணைப்பு பற்றிய முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புக்காக முழு விவரம்:

  • அமைப்பு – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை (Department Of Fisheries And Fishermen Welfare).
  • பதவி பெயர் – சாகர் மித்ரா
  • பணியிடம் – தமிழ்நாடு முழுவதும்
  • காலியிட எண்ணிக்கை – 433.
  • விண்ணப்பிக்கும் முறை – ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்).
  • அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.fisheries.tn.gov.in/.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.08.2022
See also  பம்பர் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்ட SAIL

கல்வி தகுதி:

சாகர் மித்ரா பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், வேதியியல்/ தாவரவியல்/ உயிர்வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அத்துடன், விண்ணப்பதாரருக்கு கணினி குறித்த டிப்படை அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் (IT) அறிவு இருக்க வேண்டும்.

தகுதி வரம்பு என்ன?

அவர்/அவள், சம்பந்தப்பட்ட தாலுக்கின் சம்பந்தப்பட்ட மீனவ கிராமம்/வருவாய் கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் நபராக இருப்பது நல்லது. சம்பந்தப்பட்ட மீனவ/வருவாய் கிராமத்தில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றால், சம்பந்தப்பட்ட தாலுக்கிற்குள் உள்ள அண்டை கிராமம்/வருவாய் கிராமங்களில் இருந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவார்கள்

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்விண்ணப்பதாரருக்கான வயது குறித்து பேசினால், 01.07.2022 தேதியின்படி விண்ணப்பதாரர் 35 வயதுக்கு மிகாமலும், நல்ல மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும். முக்கியமாக தமிழில் திறமையான தகவல் தொடர்பு திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

See also  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாதம்தோறும் உதவித் தொகை பெறலாம்... அரசின் இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா

சாகர் மித்ரா பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15, 000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு இங்கே கிளிக் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.


Please Share This

Leave a Reply

Your email address will not be published.