ORACLE JOB CUTS
Job Cut In India
கோரோனா தொற்றுக்கு பின்னர் உலகம் முழுவதும் வேலையின்மை அதிகரித்துள்ளது. வேலையை இழந்த பலரும் தற்போது வேலை தேடி திண்டாடி கொண்டிருக்கும் வேளையில், தற்போது தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக பணிநீக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் பல இளைஞர்களுக்கு அதிர்ச்சியை மட்டும் அல்லாது கடினமான சூழ்நிலைக்கும் தள்ளியுள்ளது.
தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள சிக்கலை சமாளிக்க பேஸ்புக், ORACLE JOB CUTS நெட்பிலிஸ் போன்ற பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. அத்துடன், பிரபல IT நிறுவனமான கூகிள் பணியாளர் தேர்வுக்கான செயல்முறையை நிறுத்தி வைத்துள்ளது. இப்படி, பல நிறுவனங்கள் பணிநீக்கத்தை கையிலெடுத்துள்ள நிலையில், தற்போது ஆரக்கிள் நிறுவனமும் (Oracle Corp) அமெரிக்காவில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
இந்த தகவலை பற்றி நேரடியாக அறிந்த ஒரு நபரை மேற்கோள் காட்டி இந்த செய்தியானது திங்களன்று வெளியானது. சுமார் 1 பில்லியன் டாலர்கள் வரையிலான செலவுகளை குறைப்பதை நோக்கமாக கொண்டதை அடுத்து, ஆரக்கிள் தனது உலகளாவிய பணியாளர்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ஜூலை மாத (Oracle Layoffs 2022) வெளியான செய்தி வெளியீடு தெரிவித்தது.
நிறுவனம் அதன் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, மே 31, 2022 ஆண்டு வரை சுமார் 143,000 முழுநேர ஊழியர்களைக் கொண்டுள்ளது.
ஆரக்கிளில் பணிநீக்கங்கள் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் உள்ள அதன் அலுவலகங்களில் உள்ள ஊழியர்களை பாதிக்கும் என்று திங்களன்று அறிக்கை கூறியது. ஆனால், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை.
ஆனால், ராய்ட்டர்ஸ் கருத்துக்கு ஆரக்கிள் இதுவரை பதிலளிக்கவில்லை. அத்துடன், கனடா, இந்தியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் பணிநீக்கங்கள் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
தொழில்நுட்ப ஜாம்பவான்களான Microsoft Corp, Alphabet Inc மற்றும் Apple Inc ஆகியவையும் கூடுதலான செலவுகள் மற்றும் மந்தநிலை பற்றிய அச்சங்களுக்கு தீர்வு காணும் வகையில் பணிநீக்கம் (JOB CUTS) அல்லது பணியமர்த்துவதில் (hiring plans) உள்ள மந்தநிலை குறித்து விவாதித்துள்ளன.
ஆப்பிள் முதல் மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் என்விடியா வரையிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியமர்த்துவதை மெதுவாக்கியுள்ளதாகவும், இன்னும் சில நிறுவனங்கள் பணியமர்த்துவதை முழுவதுமாக நிறுத்திவிட்டதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிறது. எனவே, இது அதிர்ச்சியான விஷயம் இல்லை என்றாலும், எவ்வளவு ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எண்ணிக்கையை பொறுத்தது.
ஆரக்கிளின் Q4 இல் தங்கள் கிளவுட் பிரிவு வருவாயில் 36% உயர்வைக் கண்டார்கள். ஆரக்கிளின் பங்குகள் நியூயார்க்கில் திங்கள்கிழமை $77.44 க்கு 1% க்கும் குறைவாக சரிந்து, இந்த ஆண்டு 11% குறைந்துள்ளது. ஆனால் இப்போது, வெளிப்படையாக, பணிநீக்கங்கள் பற்றிய இந்த அறிக்கை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது