செஸ் ஒலிம்பியாட்: 5வது சுற்றில் இந்தியாவின் நந்திதா, அபிமன்யூ வெற்றி

Please Share This

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் செஸ் ஒலிம்பியாடில் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் 4 சுற்றுகளில் நன்றாக ஆடிய இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் அபாரமாக ஆடுகின்றனர்.

செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாடில் அபாரமாக ஆடிவரும் தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த நந்திதா, பிரேசில் வீராங்கனை லிப்ரெஸாடோவை 33வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.ஓபன் பிரிவில் இந்திய பி அணியில் ஆடிய தமிழகத்தை சேர்ந்த குகேஷ் மற்றும் அதிபன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். இந்திய பி அணி ஸ்பெய்னை எதிர்கொண்டு ஆடியது. வலிமை வாய்ந்த ஸ்பெய்ன் அணியின் பொனெல்லியை 45 நகர்த்தலில் வீழ்த்தி அதிபன் வெற்றி பெற்றார்.

பி அணியில் ஆடிய மற்றொரு வீரரான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், ஸ்பெய்ன் வீரர் அலெக்ஸி சிரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

சிலி நாட்டு வீரர் ஹூகோவை 41வது நகர்த்தலில் வீழ்த்தி அபிமன்யூ வெற்றி பெற்றார்.


Please Share This

Leave a Reply

Your email address will not be published.